பாம்பைப் பிரசவித்த மனிதப் பெண்ணின் கதை!





மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது.

இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான்.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன்முனை என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள்.

இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார். தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி.

இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை.

1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது.

இங்கு வீடுகளில்தான் பிரசவங்கள் வந்திருக்கின்றன. மருத்துவிச்சிகள்தான் வந்து பிரசவம் மேற்கொண்டார்கள். வீட்டில் இருந்த வேப்ப மரத்தடியில் பிரசவம் நடந்தது. மருத்துவிச்சிகள், வீட்டுக்காரர்களுக்கு முன்பு ஒரு போதும் கேள்விப்பட்டு இராத, கண்டிராத அதிசயத்தை பார்க்க நேர்ந்தது.